பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) நேற்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

பிரான்சில் பாரிஸ் நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பிரான்சின் ஏனைய மாவட்டங்கள் அடங்கலாக குறித்த தேர்வு இடம்பெற்றுள்ளது.

பிரான்சில் கடந்த ஆண்டு கோவிட் நுண்ணுயிரிப் பெருந்தொற்றுக் கரணியமாக குறித்த தேர்வு முதன்முறையாக இணையவழியில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்முறை ஓரளவு சாதகமான நிலையில் தேர்வு நேரடியாக தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் இடம்பெறுகிறது. இடரான நிலையிலும் மாணவர்கள் கோவிட் சுகாதார சட்ட விதிகளுக்கு அமைவாக ஆர்வத்தோடு தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.

பிரான்சு ரீதியில் வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 12 வரை 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றுகின்றனர் என பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு முன்னோடியாக வருடாந்தம் அரையாண்டுத் தேர்வு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற தேர்வின்போது சில தமிழ்ச்சோலைப் பள்ளிகளால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

உலகம்