தெய்வீக கிராம நிகழ்வை புறக்கனித்த அரச அதிகாரிகள்.

தெய்வீக கிராம நிகழ்வை புறக்கனித்த அரச அதிகாரிகள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் தெய்வீக கிராம நிகழ்வு இடம்பெற்று வருகின்றது இந்நிகழ்வாறது கிராமங்கள் ரீதியாக இந்து சமய உணர்வையும் இந்து மத வழிபாட்டில் இடம்பெற வேண்டிய நிகழ்வையும் பிரதிபலிக்கும் வகையிலும் அறநெறி மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் நிகழ்வாகவே அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நடை பெற்று வருகின்றது. கடந்த வருட முடிவிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஒரு சிலர் இந்நிகழ்வை கேவலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் அண்மையில் வவுனியாவில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இந்நிகழ்விற்கு அழைப்பிதழில் குறிப்பிட்ட அரச அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை அதற்கான காரணத்தை தேடிய போது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தரின் அனுமதியை பெறாது வவுனியாவில் உள்ள சில அமைப்புக்களுடன் சேர்ந்து நிகழ்வை செய்துள்ளர் மாவட்ட அதிபர் மேலதிக அதிபர் பிரதேச செயலளாளர் உதவி மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் உதவிப்பிரதேச செயலாளர் கிராம அலுவலர் ஆகியோரின் பெயரை அழைப்பிதழில் இட்ட போதும் அரச அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை

புலம் பெயர்வாழ் மக்களின் நிதி உதவியில் தங்களை வாழ வைத்துக் கொள்ளும் சில அமைப்புக்கள் இந்நிகழ்வுக்கு அனுசரனை வழங்குவதாக அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்ததுடன் வவுனியாவில் உள்ள பல ஆலயங்களை சேர்ந்த நிர்வாகத்தினருக்கும் அழைப்பு விடுத்து அன்றைய நிகழ்வில் பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர் 

பல ஆலயங்களை சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாத போதும் மறுதினம் அவர்களை தேடிச் சென்று சான்றிதழ்களை வழங்கியுள்ளார்கள் அதுமட்டுமல்லாது அன்றைய நிகழ்வில் உதவி செய்த அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வுக்கு விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது

அரச அதிகாரிகளுக்கும் புலம் பெயர் மக்களின் நிதியில் நினைவு சின்னங்கள் வழங்கப்பட இருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளாத காரணத்தினால் அவர்களுக்கும் அலுவலகம் சென்று வழங்க தீர்மானித்துள்ளார்கள்

ஒரு நிகழ்வு ஏன் நடத்தப்படுகின்றது அதன் பெறுமதி தெரியாது அரச அலுவலர்களை கௌரவிப்பதும் தங்களை தானே கௌரவிப்பதும் போன்ற செயற்படுகள் இடம் பெற்று வருகின்றமை கவலைக்குரிய விடயம் என சமய ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

குறுகிய நோக்கம் கொண்ட வவுனியாவில் இயங்கும் சில அமைப்புகள் வட மாகாண செயலாளராக சிங்களவரை நியமிப்பதற்கு தமிழ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அவருக்கு பிரமான்டமான நிகழ்வை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்

செய்திகள்