கொழும்பில் பயங்கரம்! காதலனுடன் சேர்ந்து இளைஞனை கொலை செய்த சிறுமி

கொழும்பில் பயங்கரம்! காதலனுடன் சேர்ந்து இளைஞனை கொலை செய்த சிறுமி

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்குமிடம் ஒன்றில் தற்காலிகமாக தங்கிருந்த 15 வயதுடைய சிறுமியுடன் இருந்த நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த சிறுமியின் காதலன் என கூறப்படும் 19 இளைஞன், குறித்த நபரை உடைந்த போத்தலில் ஒன்றில் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் குறித்த சிறுமியுடன் ஏற்கனவே காதல் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இளைஞன் மற்றும் 15 வயதுடைய சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகள்