பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 -ல் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டது. யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது தெரியுமா?

விஜய் டிவியில் பிக் பாஸ் 5-வது சீசன் இந்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமீர், சஞ்சீவ் இருவரும் வைல்டு கார்டு வழியாக நுழைந்தார்கள். எவிக்‌ஷன் மூலம் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் வெளியேறி நிறைவாக இப்போது ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று டைட்டில் வின்னருக்கான ரேஸில் இருக்கிறார்கள்.

அமீர், பிரியங்கா, நிரூப், ராஜு, பாவனி ஆகிய இந்த ஐவரில் யார் டைட்டில் வெல்லப் போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும். சரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஊதியம் வழங்கப் படுவது தெரிந்ததே. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் யாருக்கு எவ்வளவு சம்பளம் பார்க்கலாமா?

பிரியங்கா

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளரான இவரது சம்பளம்தான் இந்த சீசனில் அதிக சம்பளம் எனச் சொல்லப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.50,000 இவருக்கு சம்பளமாக வழங்கப் பட்டுள்ளதாம். நூறு நாளும் நிகழ்ச்சியில் இருந்துள்ளதால் மொத்தத் தொகைக்கு நூறால் பெருக்கிக் கொள்ளவும்.

இமான் அண்ணாச்சி

ஒரு நாளைக்கு இமான் அண்ணாச்சிக்கு 40,000 வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர் நிகழ்ச்சிக்குள் செல்லும்போதே இத்தனை நாள்தான் இருக்க முடியும் எனச் சொல்லிச் சென்றதாகவும் சொல்கிறார்கள்.

பாவனி

விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு நாளைக்கு 20,000 வழங்கப் பட்டுள்ளது. இவரும் 100 நாட்கள் நிகழ்ச்சியில் இருந்து விட்டார்.

சின்னப் பொண்ணு, ராஜு, அபிஷேக், அபிநய்:

இவர்கள் நால்வருக்கும் ஒருநாள் சம்பளம் 25,000. இவர்கள் இருந்த நாட்களைக் கணக்கிட்டு மொத்தத் தொகையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இசைவாணி, அக்‌ஷரா

டி.வி ரசிகர்களுக்கு பெரிதும் அறிமுகமில்லாத இவர்கள் இருவருக்கும் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000.

ஸ்ருதி, ஐக்கி, நிரூப், சிபி, தாமரை:

இந்த ஐவருக்கும் நாளொன்றுக்கு 10,000 வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிபி கடைசியில் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 12 லட்சத்தை எக்ஸ்ட்ராவாக எடுத்துச் சென்றுள்ளார்.

இவர்கள் தவிர, இந்த சீசனில் கௌரவ ஊதியம் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் வருண். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஊதியமே வேண்டாம் என்றாராம் இவர். ஆனாலும் கௌரவ ஊதியமாக ஒரு தொகை வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 

இந்தியா