என்னை புலிகளின் தலைவரே தோற்கடித்தார்! ரணில் ஆதங்கம்

என்னை புலிகளின் தலைவரே தோற்கடித்தார்! ரணில் ஆதங்கம்

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பிரபாகரன்தான் என்னை தோற்கடிக்க வைத்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஏன் இன்னும் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதியாக முடியாமல் உள்ளது என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1994இல் சந்திரிக்கா மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனால் முடிவு மாறியது. அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு பிரபாகரனே தீவிரமாக செயற்பட்டார்.

அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் பொதுவேட்பாளர்கள்தான் களமிறங்கினர்.

இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. நபர்களைவிடவும் கொள்கைகளே முக்கியம் என ரணில் தெரிவித்துள்ளார்

செய்திகள்