இந்தியாவை குறித்தே சீனத் தூதுவர் இவ்வாறான கருத்து.

இந்தியாவை குறித்தே சீனத் தூதுவர் இவ்வாறான கருத்து.

யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நகரமே அன்றி வேறு எந்த நாட்டினதும் தெற்கில் அமைந்துள்ள நகரம் அல்ல என சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் தான் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னணியில் மறைவான நிகழ்ச்சி நிரல்கள் எதுவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பொன்றில் சீனத் தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காவுக்கான சீனாவின் தூதுவர் என்ற முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது கடமை.

கொரோனா தொற்று நோய் காரணமாக என்னால், அதனை செய்ய முடியாமல் போனது. இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்வது என்பது பல காலத்திற்கு முன்னர் திட்டமிடப்பட்ட நடவடிக்கை எனவும் சீனத் தூதுவர் கூறியுள்ளார்.

இந்தியாவை குறித்தே சீனத் தூதுவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியா செய்திகள்