கொழும்பு  தேவாலயமொன்றிலிருந்து குண்டு மீட்பு!

கொழும்பு தேவாலயமொன்றிலிருந்து குண்டு மீட்பு!

கொழும்பு − பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசேட அதிரடிபடை அதிகாரிகளினால் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

வெலிகடை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்