இந்திய முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்து வெளியானது அறிக்கை

இந்திய முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்து வெளியானது அறிக்கை

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் உயிரை காவு வாங்கிய ஹெலிகாப்டர் விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு மற்றும் நாசவேலை காரணமில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 8ம் திகதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே மலைப் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முப்படையின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர். செளதரி, ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு விசாரணையில் இறங்கியது. இந்த விசாரணை தொடர்பான அறிக்கை தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா